நடிகை நிக்கி கல்ராணியின் வீட்டில் திருடிய பணியாளர் தனுஷை போலீசார் எச்சரித்து அனுப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டார்லிங் என்ற படம் மூலம் கதாநாயகியாக தமிழ் திரையில் அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி. மொட்ட சிவா கெட்ட சிவா, மரகத நாணயம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நிக்கி கல்ராணி, சமீபத்தில் நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ராஜவம்சம் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இவர் சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். தனது வீட்டில் சில விலையுயர்ந்த பொருட்கள் காணாமல் போதனால்,அண்ணாசாலை காவல்நிலையத்தில் நிக்கி கல்ராணி புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் தனது வீட்டில் வேலை பார்ப்பதற்காக தனியார் ஏஜென்சி மூலம் நியமிக்கப்பட்ட தனுஷ் என்பவர் விலை உயர்ந்த பொருட்களை திருடிச் சென்றதாகக் கூறியிருந்தார். மேலும், அவர் தற்போது வேலைக்கும் வருவதில்லை எனவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார். இந்த புகாரை அடுத்து விசாரணை செய்ததில், தனுஷ் திருபூரில் உள்ள தனது நண்பர் வீட்டில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், பணியாளர் தனுஷ் பொருட்களை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. இதையடுத்து கடும் தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்ட போலீசார் பதுங்கி இருந்த தனுஷை போலீசார் கைது செய்தனர். விசாரனையில், அவர் நிக்கி கல்ராணியின் வீட்டில் இருந்து விலை உயர்ந்த கேமராவை திருடி அதை விற்றதாக வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து திருடப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், வழக்கு வாப்பஸ் பெறப்பட்டதால் தனுஷை போலீசார் எச்சரித்து விடுவித்தனர்.