2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுமா ஊரடங்கு!

தமிழகத்தில், மேலும் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கை நீட்டிக்க மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், வரும் 24ம் தேதி வரை தளர்வுடன் கூடிய முழு…

தமிழகத்தில், மேலும் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கை நீட்டிக்க மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், வரும் 24ம் தேதி வரை தளர்வுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு முடிய இரு தினங்களே உள்ள நிலையில், ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுகாதாரத்துறை செயலர், மருத்துவ வல்லுநர்கள் உள்ளிட்டோருடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.

ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் பாதிப்பு குறைவாக இருந்தாலும் தொற்று உயர்வதை மறைக்க முடியாது என குறிப்பிட்டார்.
நாளொன்றுக்கு 35 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்த முதலமைச்சர், அனைத்துக்கட்சி உறுப்பினர்கள் கூட்டத்திலும் கருத்தை கேட்டு, பின்னர் அறிவிப்பு வெளியிடப்படும், என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.