மருத்துவமனையில் உயிரை மாய்த்துக் கொண்ட கொரோனா நோயாளி!

சென்னை தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் வழங்க மறுத்ததால் கொரோனா நோயாளி ஒருவர் மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர்…

சென்னை தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் வழங்க மறுத்ததால் கொரோனா நோயாளி ஒருவர் மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவருக்கு சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த செவ்வாய்கிழமை சேலையூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ராஜேந்திரனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டு இருப்பதாக கூறி அவரை வேறு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு உறவினர்களிடம் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. இதனால் மனமுடைந்த ராஜேந்திரன் மருத்துமனையின் 3வது மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டார்.

இந்த செய்தி அறிந்த ராஜேந்திரனின் உறவினர்கள், ஆக்சிஜன் வழங்காததால்தான் அவர் உயிரை மாய்த்துக் கொண்டார் என குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இதுகுறித்து காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். புகாரையடுத்து, இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.