ஆக்சிஜன் பயன்பாட்டை தணிக்கை செய்ய குழு!

தமிழகத்திற்கு ஆக்சிஜன் விநியோகம் மற்றும் பயன்பாட்டை தணிக்கை செய்ய 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலையால் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து சிகிச்சைக்குத் தேவையான ஆக்சிஜனுக்கு…

தமிழகத்திற்கு ஆக்சிஜன் விநியோகம் மற்றும் பயன்பாட்டை தணிக்கை செய்ய 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலையால் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து சிகிச்சைக்குத் தேவையான ஆக்சிஜனுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது.
இதனை ஈடுசெய்ய தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் ஆக்சிஜன், மருத்துவமனைகளுக்கு சிலிண்டர்களில் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் ஆக்சிஜன் விநியோகம் தொடர்பான பணிகளை கண்காணிக்க, ஐஏஎஸ் அதிகாரி தாரேஸ் அகமது தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதில், மருத்துவ ஆக்ஸிஜன் ஒதுக்கீடு, விநியோகம் உள்ளிட்டவற்றை 5 பேர் கொண்ட குழு கண்காணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் ஒதுக்கீடு செய்வதில் உள்ள தாமதத்தை குறைத்து, உரிய நேரத்தில் ஆக்சிஜன் விநியோகிக்கப்படுவதை, இதன் மூலம் உறுதி செய்ய இயலும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.