ஆக்சிஜன் கொண்டு செல்ல கிரயோஜனிக் டேங்கர் லாரிகள் இருந்தால் தயவு செய்து உதவுங்கள் என்று டெல்லி அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
டெல்லியில், கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், அங்கு ஆக்சிஜன் பற்றாக்குறையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், உயிரிழப்புக்களும் அதிகரித்துள்ளன. இந்நிலையில், ஆக்சிஜன் கொண்டு செல்வதற்கு கிரயோஜனிக் டேங்கர் லாரிகள் டெல்லி அரசுக்குத் தேவை என்று தமிழ் நாளிதழ்களில், டெல்லி மாநில குடும்ப நலத்துறை சார்பில் விளம்பரம் அளிக்கப்பட்டுள்ளது.
அதில், டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுவதாகவும், ஆக்சிஜன் டேங்கர்கள் இருந்ததால், தயவு செய்து உதவுங்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அவசர உயிர் காக்கும் வேண்டுகோள் என்றும், அரசு உங்களுக்கு என்றும் நன்றியுடன் இருக்கும் என்றும் அந்த விளம்பரத்தில் உருக்கத்துடன் தெரிவிக்கப்பட்டுள்ளது.







