முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆக்சிஜன் உற்பத்திசெய்ய நடவடிக்கை: முதல்வர்!

ஆக்சிஜன், தடுப்பூசிகள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு தேவைப்படும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில், தமிழ்நாட்டிலேயே ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, மருத்துவ உயர் தொழில்நுட்ப சாதனங்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், தடுப்பூசிகள் மற்றும் கொரோனா தொடர்பான மருந்துகள் உற்பத்தியை தமிழ்நாட்டிலேயே உருவாக்குவதற்கும், தொழில் கூட்டு முயற்சிகளை உருவாக்கவும் முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

இதனடிப்படையில், தொழில் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம், ஆக்சிஜன், தடுப்பூசி உள்ளிட்ட அத்தியாவசிப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு ஆதரவையும், உதவிகளையும் அளிக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

குறைந்தபட்சம் 50 கோடி ரூபாய் முதலீட்டில் கூட்டாண்மை அடிப்படையில் ஆலைகளை நிறுவ, இந்திய, வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து விருப்பக் கருத்துகளை இம்மாத இறுதிக்குள் அரசு கோரியுள்ளது.

இந்த விருப்பக் கருத்துகள் ஆய்வு செய்யப்பட்டு, ஆக்சிஜன், தடுப்பூசிகள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் உற்பத்தி உட்கட்டமைப்புகளை விரைவில் அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:

Related posts

தேர்தல் நேரத்தில் கொரோனா பணிகள் மேற்கொள்வதில் சிரமம் – ஆணையர் பிரகாஷ்

Gayathri Venkatesan

பெண்களுக்கு 50 % இட ஒதுக்கீடு: விசிக தேர்தல் அறிக்கை

Gayathri Venkatesan

வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அமமுக!

Gayathri Venkatesan