முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம் செய்திகள்

தமிழகத்தில் 35 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் ஒரே நாளில் 35 ஆயிரத்து 579 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் முப்பதாயிரத்தைக் கடந்த இந்த தொற்று இன்னும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதைக் கட்டுப்படுத்த மாநில அரசு கடும் நடவடிக்கை எடுத்து வந்தாலும் பாதிப்பு குறையவில்லை.

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 35,579 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் இதுவரை 17 லட்சத்து 34 ஆயிரத்து 804 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இப்போது, 2 லட்சத்து 63 ஆயிரத்து 390 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 25 ஆயிரத்து 368 பேர் சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 14 லட்சத்து 52 ஆயிரத்து 283 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா பாதிப்பு காரணமாக, ஒரே நாளில் 397 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆயிரத்து 131 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் 6073 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இன்று மட்டும் 73 பேர் சென்னையில் உயிரிழந்துள்ளனர். 6537 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். செங்கல்பட்டில் 2092 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 858 பேருக்கும் திருவள்ளூரில் 1791 பேருக்கும் திருச்சியில் 1375 பேருக்கும் கோவையில் 3335 பேருக்கும்கொரோனா பாதிப்பு உறுதியாகி இருக்கிறது.

Advertisement:

Related posts

’இவற்றுக்கு விடைகள் உண்டா?’: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி

Karthick

இலங்கை கிரிக்கெட் வீரருக்கு 6 வருடம் தடை!

Karthick

சேலம் ஆத்தூர் திமுக வேட்பாளர் மாற்றம்!

Jeba