கொரோனா பரிசோதனை முடிவுகளை விரைந்து தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா சிகிச்சை குறித்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. வழக்கினை விசாரணை செய்த தலைமை நீதிபதி சஞ்சீப் பானார்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, “தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு சமமான அளவில் மருந்து, தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
மருந்து, தடுப்பூசி மருந்து ஒதுக்கீடு தொடர்பான நடவடிக்கை குறித்த விரிவான அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும். கொரோனா பரிசோதனை முடிவுகளை விரைந்து தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிடடனர்.
முடிவுகளை விரைவாக அறிவதன் வாயிலாக கொரோனா பரவலையும் விரைந்து கட்டுப்படுத்த முடியும் எனவும் நீதிபதிகள் நம்பிக்கை தெரிவித்தனர். கொரோனா தொற்றின் இரண்டாவது அலை குறைந்தாலும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசுகள் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும் வழக்கின் விசாரணையை மே 24 ஆம் தேதிக்கு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.







