பஞ்சாப் பொறுப்பு ஆளுநராக பன்வாரிலால் புரோகித் நியமனம்

தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை, பஞ்சாப் மாநில பொறுப்பு ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். மகாராஷ்டிராவை சேர்ந்த பன்வாரிலால் புரோகித் (81), கடந்த 2017 ஆம் ஆண்டு முதல்,…

தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை, பஞ்சாப் மாநில பொறுப்பு ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மகாராஷ்டிராவை சேர்ந்த பன்வாரிலால் புரோகித் (81), கடந்த 2017 ஆம் ஆண்டு முதல், தமிழ்நாடு மாநில ஆளுநராக பொறுப்பு வகித்து வருகிறார். தமிழ்நாட்டுக்கு வருவதற்கு முன் அசாம் மாநில ஆளுநராக இருந்து வந்தார்.

இந்நிலையில் பன்வாரிலால் புரோகித்துக்கு பஞ்சாப் ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். அதோடு சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகியாகவும் அவருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பன்வாரிலால் புரோகித் இனி தமிழகத்திற்கு மட்டுமின்றி பஞ்சாப் மாநிலங்களுக்கு ஆளுநராகவும், சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகியாகவும் பொறுப்பேற்க இருக்கிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.