பிரபல நடிகையான சந்திரா லக்ஷ்மண் சீரியல் நடிகரான டோஷ் கிறிஸ்டியை திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்.
ஸ்ரீகாந் நடித்த ’மனசெல்லாம்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சந்திரா லக்ஷ்மண். இதில் ஸ்ரீகாந்தின் தங்கையாக நடித்திருந்தார். பின்னர், ஸ்ரீகாந்த், சினேகா நடித்த ஏப்ரல் மாதத்தில், வி.சி.குகநாதன் இயக்கிய ஆதிக்கம், ஜெயம் ரவியின் தில்லாலங்கடி உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் மலையாளப் படங்களில் கவனம் செலுத்திய அவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு டிவி தொடர்களில் நடிக்கத் தொடங்கினார். இதில் அவருக்கு தனி ரசிகர்கள் உருவாகினர். இவர் மலையாள நடிகர் டோஷ் கிறிஸ்டியுடன் ஸ்வாகதம் சுஜாதா உட்பட சில தொடர் களில் நடித்து வந்தார். அப்போது இவர்களுக்குள் காதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல்கள் கசிந்தபோதும் இருவரும் மவுனம் காத்து வந்தனர். இந்நிலையில்,
தங்கள் திருமணம் பற்றி நடிகை சந்திரா அறிவித்துள்ளார். டோஷின் கையை பிடித்திருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அவர், எங்களின் குடும்பத்தினரின் ஒப்புதல் மற்றும் ஆசியுடன் புது பயணத்தை துவங்கும் நேரத்தில் எங்கள் சந்தோஷத்தில் உங்களையும் சேர்த்துக்கொள்ள விரும்புகிறோம். என் திருமணம் குறித்த முடிவில்லாத கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன். எங்களை ஆசிர்வசியுங்கள், தொடர்ந்து அப்டேட் செய்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து ரசிகர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.