முக்கியச் செய்திகள் உலகம்

ஆப்கானிஸ்தானில் இருந்து 24 மணி நேரத்தில் 12,500 பேர் மீட்பு: அமெரிக்கா

ஆப்கானிஸ்தானிலிருந்து கடந்த 24 மணிநேரத்தில் 12,500 பேரை மீட்டுள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறத் தொடங்கியதை அடுத்து,
தலிபான்கள் நாட்டை கைப்பற்றியுள்ளனர். இதையடுத்து அமெரிக்கா, இந்தியா உள்பட
பல்வேறு நாடுகள் ஆப்கானிஸ்தானில் சிக்கியிருக்கும் தங்கள் நாட்டு மக்களை விமானங்கள் மூலமாக வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

இதற்கிடையில் தலிபான்களுக்கு பயந்து ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தானியர்களும்
அண்டை நாடுகளுக்குத் தப்பி செல்கின்றனர். இதற்காக காபூல் விமான நிலையத்துக்கு உள்ளும் வெளியும் ஆயிரக்கணக்கானோர் காத்திருக்கின்றனர்.

விமான நிலையத்தை அமெரிக்கா தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். காபூல் நகரை
தலிபான் கைப்பற்றியதில் இருந்து சுமார் ஒரு லட்சம் பேர், ஆப்கானிஸ்தானை விட்டு
வெளியேறியுள்ளனர். இந்நிலையில் காபூல் விமான நிலையத்துக்கு வெளியே நேற்று
அடுத்தடுத்து சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்ததில், 110 -க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் குண்டுவெடிப்புக்குப் பின் காபூல் விமான நிலையத்தில் இருந்து மீட்பு விமானங்கள் மீண்டும் இயங்கத் தொடங்கி இருப்பதாக அமெரிக்க ராணுவம் தெரிவித் துள்ளது. அதோடு, அங்கிருந்து, கடந்த 24 மணி நேரத்தில் 12,500 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்றும் அதில், 35 அமெரிக்க ராணுவ விமானங்கள் மூலம் 8,500 பேரும், 54 கூட்டு விமானங் கள் மூலம் 4,000 பேரும் மீட்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, காபூல் விமான நிலையத்தின் தெற்கு மற்றும் கிழக்கு வாயில்களின் வழியே யாரும் அனுமதிக்கப்படவில்லை என்று தலிபான் படையினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement:
SHARE

Related posts

ராகுல் காந்தியின் 51-வது பிறந்தநாள் இன்று!

Gayathri Venkatesan

செல்போன் பயன்படுத்திய தங்கையை வெட்டிக் கொன்ற அண்ணன்

Vandhana

தடுப்பூசி தயாரிப்புக்கு உத்தரவிட உயர்நீதிமன்றம் மறுப்பு!