Gold Rate | மீண்டும் ஒரு லட்சத்தை கடந்த தங்கம் விலை….!

ஒரு சவரன் தங்கத்தின் விலை மீண்டும் ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது.

தங்கம் விலையானது நாள்தோறும் பல்வேறு ஆச்சரியங்களை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், தங்கம் விலை நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.12,400-க்கும், ஒரு சவரன் ரூ.99ஆயிரத்து 200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தொடர்ந்து இன்று காலையும் விலை உயர்ந்த தங்கமானது  கிராமுக்கு ரூ.80 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,480-க்கும், சவரனுக்கு ரூ.640 அதிகரித்து ஒரு சவரன் ரூ.99ஆயிரத்து 840-க்கு விற்பனையானது. வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.231-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 31 ஆயிரத்துக்கும் விற்பனையானது.

இந்த நிலையில் மாலையிலும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன் படி   சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை  கிராமுக்கு 90 ரூபாயும் சவரனுக்கு 720 ரூபாயும் உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,570-க்கும், ஒரு சவரன் ரூ.100560-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி 231 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.