கொரோனா சிகிச்சையின் தேவைக்கேற்ப, மருத்துவர்கள் ஆக்சிஜனை பயன்படுத்த வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.
கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ள கொரோனா சிகிச்சைக்கான ஏற்பாடுகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியும் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் மற்றும் படுக்கை வசதிகள் குறித்து மருத்துவமனை முதல்வரிடம் அமைச்சர்கள் கேட்டறிந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனை, 830 படுக்கை வசதிகளுடன் சிறப்பாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும், இதுவரை 17 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பி இருப்பதாகவும் அவர் கூறினார்.







