இன்று முதல் ரூ.2,000 நிவாரண நிதி!

தமிழகத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,000 கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டம் இன்று தொடங்கியது. தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய முதல் கையெழுத்தாக கொரோனா பேரிடர் காலத்தில்…

தமிழகத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,000 கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டம் இன்று தொடங்கியது.

தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய முதல் கையெழுத்தாக கொரோனா பேரிடர் காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4,000 வழங்கும் திட்டத்தில் கையெழுத்திட்டார்.

இந்நிலையில் கடந்த மே 10-ம் தேதி முதற்கட்டமாக கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை தலைமை செயலகத்தில் தொடங்கிவைத்தார். அதன் அடிப்படையில் இன்று கொரோனா நிவாரண நிதி ரூ.2,000 வழங்கும் திட்டம் தமிழகம் முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ளது.

சென்னையில் கொண்டி தோப்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,000 வழங்கும் பணியை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு மற்றும் திமுக எம்பி தயாநிதி மாறன் தொடங்கிவைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “தமிழகம் முழுவதும் 2 கோடியே 6 லட்சம் பேருக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கப்படுகிறது. டோக்கன் முறையில் ஒரு நாளைக்கு 200 பேருக்கு சமூக இடைவெளியை பின்பற்றி நிவாரண நிதி வழங்கப்படும்.

மேலும் ரெம்டெசிவர் பொருத்தவரை தமிழகத்திற்கு மத்திய தொகுப்பிலிருந்து 7 ஆயிரம் குப்பிகள் வழங்கப்படுவதாக தெரிவித்தார். தற்போது தமிழக முதலமைச்சரின் விரைவான நடவடிக்கையால் நாளை தமிழகத்தில் 50,000 ரெம்டெசிவர் மருந்து குப்பிகள் வருவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளதாக” அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.