தமிழகத்தில் இன்று மட்டும் 31,892 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 288 பேர் கொரோனாவால் இன்று மட்டும் உயிரிழந்துள்ளனர்.
இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையை சந்தித்து வருகிறது. இந்திய அளவில் தினமும் 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் 31, 892 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை 15,31,377 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் 288 பேர் கொரோனாவால் மரணடைந்தனர். இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை 17,056 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தற்போது 1,95 ,339 பேர் கொரோனாவுக்கு கிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இன்று மட்டும் 20,037 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். மேலும் இதுவரை 13,18,982 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.







