மருந்துகளை கள்ளச்சந்தையில் விற்பது மனிதத்தன்மையற்ற செயல்!

கொரோனா நோய் தொற்று அதிகரித்துவரும் நிலையில் ரெம்டெசிவர் மருந்து மற்றும் ஆக்சிஜனை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை கள்ளச்சந்தையில் விற்பனைச் செய்வது மனிதாபிமானமற்ற செயல் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் புழல்…

கொரோனா நோய் தொற்று அதிகரித்துவரும் நிலையில் ரெம்டெசிவர் மருந்து மற்றும் ஆக்சிஜனை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை கள்ளச்சந்தையில் விற்பனைச் செய்வது மனிதாபிமானமற்ற செயல் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் புழல் பகுதியில் உள்ள சென்னை மாநகராட்சி நகர்புற சமுதாய நல மருத்துவமனை, சூரப்பட்டு வேலம்மாள் கொரானா சிறப்பு சிகிச்சை மையம், மாத்தூர் மருத்துவமனை ஆகிய 3 இடங்களில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்ததன் விளைவாக தமிழகத்திற்கு தற்போது 419 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைத்துள்ளது. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடில்லாமல் கிடைக்க முதலமைச்சர் தொடர்ந்து நடவடிக்கை எடுத்துவருகிறார். 18 வயதிலிருந்து 40 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் விரைந்து தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்ட அவர், ரெம்டெசிவர் மருந்து மற்றும் ஆக்சிஜனை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வது மனிதாபிமானமற்ற செயல் என்றும் அது கண்டிக்கத்தக்கது என்றும் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.