கொரோனா பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்க இன்று மாலை 5 மணிக்கு சட்டமன்ற அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்க சட்டமன்ற அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சென்னை தலைமைச் செயகலத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனை வழங்குமாறு சட்டமன்ற கட்சித் தலைவர்களுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். ஆலோசனைக் கூட்டத்தில் ஒவ்வொரு சட்டமன்ற கட்சியின் சார்பாக இரண்டு பிரதிநிதிகள் பங்கேற்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.