குழந்தைகளிடம் கோவாக்சின் பரிசோதனை: மத்திய அரசு அனுமதி

2 முதல் 18 வயதுக் குழந்தைகளிடம் கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. கொரோனா பரவலைக்கட்டுப்படுத்தவும் உயிரிழப்பை தடுக்கவும் கொரோனா…

2 முதல் 18 வயதுக் குழந்தைகளிடம் கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. கொரோனா பரவலைக்கட்டுப்படுத்தவும் உயிரிழப்பை தடுக்கவும் கொரோனா தடுப்பூசிதான் மருத்துவர்கள் பரிந்துரை செய்யும் ஒரே வழி. இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்ட், ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாரத் பையோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகளை 2 முதல் 18 வயது உள்ள குழந்தைகளிடம் பரிசோதனை செய்ய எஸ்இசி ( Subject expert committe) என்ற குழு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்புக்குக் கோரிக்கை வைத்தது. இந்த கோரிக்கையை நன்றாக பரிசீலித்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு. கோவாக்சின் தடுப்பூசிகளைக் குழந்தைகளிடம் பரிசோதனை செய்ய அனுமதி வழங்கி உள்ளது. குழந்தைகளிடம் இரண்டு மற்றும் மூன்றாவது கட்ட பரிசோதனைகள் செய்ய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையானது நல்ல உடல்நிலையில் உள்ள 525 குழந்தைகளிடம் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தி 28 நாட்கள் கழித்து இரண்டாவது டோஸ் செலுத்தப்படுகிறது. இந்த தடுப்பூசிகள் தசைகளில்தான் செலுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.