டெல்லியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தியை மறியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
டெல்லியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசிய நிலையில், இன்று காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தியின் இல்லத்தில் அவரை சந்தித்தார்.
அப்போது கொரோனா தடுப்பூசி, புதிய வேளாண் சட்டம் தொடர்பாக, சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
சந்திப்பின்போது சோனியா காந்திக்கு புத்தகத்தை பரிசாக வழங்கினார். அந்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, முதலமைச்சர் மனைவி துர்கா ஸ்டாலின் உடனிருந்தனர்.
தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றதற்கு சோனியா காந்தி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். இதனைத் தொடர்ந்து இன்று பிற்பகலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.







