முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சோனியா காந்தி, ராகுல் காந்தியை சந்திக்கிறார்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காங்கரிஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி ஆகியோரை இன்று சந்திக்கிறார்.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றபின் மு.க.ஸ்டாலின், நேற்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை முதல் முறையாக மோடியை சந்தித்தார்.

பிரதமருடனான சந்திப்பு மன நிறைவான சந்திப்பாக அமைந்துள்ளதாகவும் மேலும் தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டத்துக்கு உறுதுணையாக இருப்பேன் என பிரதமர் மோடி உறுதியளித்ததாக ஸ்டாலின் தெரிவித்தார்.

நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும், வேளாண் சட்டம் திரும்ப பெற வேண்டும், தடுப்பூசி அதிகம் வழங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பிரதமரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் முன்வைத்தார்.

இதனையடுத்து இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காங்கரிஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்து பேசவுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

தமிழகத்தில் தனித்து ஆட்சி அமைக்கும் வல்லமையும் செல்வாக்கும் அதிமுகவுக்கு உள்ளது; அமைச்சர் பாண்டியராஜன் கருத்து!

Saravana

இந்திய வம்சாவளியை சேர்ந்த பத்திரிகையாளர் மேகா ராஜகோபாலனுக்கு புலிட்சர் விருது !

Vandhana

சென்னையில் மீண்டும் தடுப்பூசி முகாம்

Halley karthi