யூடியூப்பர் மதன் கைது; சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணை

மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதாக 120க்கும் மேற்பட்ட புகார்கள் வந்த தைத் தொடர்ந்து யூடியூப்பர் மதன் கைது செய்யப்பட்டு சென்னை அழைத்துவரப்பட்டுள்ளார். பப்ஜி விளையாட்டு, ஃப்ரீ பயர் போன்ற ஆன்லைன் விளையாடுகளை எப்படி விளையாடுவது என்று…

மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதாக 120க்கும் மேற்பட்ட புகார்கள் வந்த தைத் தொடர்ந்து யூடியூப்பர் மதன் கைது செய்யப்பட்டு சென்னை அழைத்துவரப்பட்டுள்ளார்.

பப்ஜி விளையாட்டு, ஃப்ரீ பயர் போன்ற ஆன்லைன் விளையாடுகளை எப்படி விளையாடுவது என்று மதன் எனும் இளைஞர் தனது யூடியூப் இணையதளத்தில் வீடியோக்கள் வெளியிட்டு வந்தார். அவர் வெளியிடும் யூடியூப்கள் வெளித்தோற்றத்துக்கு கற்றுக் கொடுப்பது போல இருந்தாலும், தனது முகத்தை காட்டாமல் குரலை மட்டும் பதிவிட்டு வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்த நிலையில், அதில் ஆபாச வார்த்தைகளை பேசி வருவதாகவும் தகவல் வெளியாகியது.

விளையாட்டில் தன்னுடன் “சாட்” (Chat) செய்யும் பள்ளி சிறுமிகளின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு சென்று பாலியல் ரீதியாக பேசி அத்துமீறியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து போலீசாரிடம் 120-க்கும் மேற்பட்ட பல்வேறு காவல்நிலையங்களில் பதிவு செய்யப்பட்டன. இதுகுறித்து புளியந்தோப்பு சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் வந்ததை அடுத்து, மதனை விசாரணைக்கு இன்று ஆஜராகக்கூறி புளியந்தோப்பு துணை ஆணையர் அலுவலக போலீசர் உத்தரவிட்டு இருந்தனர். இந்நிலையில், விசாரணைக்கு ஆஜராகாமல் யூடியூபர் மதன் தலைமறைவாகிவிட்டார்.

இந்த நிலையில் மதனின் மனைவியும், அவரது யூடியூப் தளத்தின் நிர்வாகியுமான கிருத்திகாவை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் மதனும் இன்று தருமபுரியில் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
யூடியூப்பர் மதன் சிறுமிகளிடம் ஆபாசமாக பேசிய சாட்களும், வீடியோவில் சிறுவர்களிடம் ஆபாசமாகவும், தகாத வார்த்தைகளிலும் பேசிய ஆடியோவும், வீடியோவும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் மதன் சார்பில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி தண்டபானி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அவருக்கு முன் ஜாமீன் தர போலீசார் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். யூடியூபர் மதனின் பேச்சுகள் அடங்கிய சிடியை தாக்கல் செய்த காவல்துறையினர், இன்று காலை மதன் கைது செய்யப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தனர்.
மதன் கைது செய்யப்பட்டதால், முன் ஜாமீன் மனு மேற்கொண்டு விசாரிக்க தேவையில்லை என மதன் வழக்கறிஞர் கூறினார். இரு தரப்பு விளக்கத்தேற்று மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி தண்டபாணி உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே போலீசாரின் விசாரணையில் போலீஸ் காலில் விழுந்து கதறிய மதன், பெண்களையும் அவதூறாக பேசியது தவறுதான் தன்னை மன்னித்து விடுங்கள் எனவும் கதறியதாக தகவல் வெளியாகி உள்ளது. மதனின் இரு சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரது லேப்டாப் மற்றும் ஐபேட் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன. அடுத்தகட்டமாக மதனின் தந்தை மாணிக்கம், சகோதரர் சம்பத்திடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். மதனின் பெண் தோழிகளிடமும் போலீசார் விசாரணை நடத்த திடமிட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.