தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் நிறைவு

2022-2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் பட்ஜெட் தாக்கல் நிறைவு பெற்றது. முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு இடைக்கால நிதிநிலை அறிக்கை கடந்த ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி கலைவாணர் அரங்கில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில்…

2022-2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் பட்ஜெட் தாக்கல் நிறைவு பெற்றது.

முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு இடைக்கால நிதிநிலை அறிக்கை கடந்த ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி கலைவாணர் அரங்கில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது 2022-2023 ஆம் ஆண்டுக்கான முழுமையான நிதிநிலை அறிக்கை ஜார்ஜ் கோட்டையில் இருக்கக்கூடிய சட்டமன்ற அரங்கில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. காலை 10 மணி அளவில் தனது பட்ஜெட் உரையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கிவைத்தார்.

ஒரு மணி நேரம் 50 நிமிடம் நிதி நிலை அறிக்கையை வாசித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையை நிறைவு செய்தார். மேலும், நாளை காலை 10 மணி வரை சட்டமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

இந்த பட்ஜெட் கூட்ததொடர் முடிவடைந்த பின்பு மெரினாவில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.

இதனையடுத்து, பட்ஜெட் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்ய அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடப்பெற்றது. சபாநாயகர் தலைமையிலான இந்த கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன், ஓ.பன்னீர்செல்வம், செல்வப்பெருந்தகை, ஜி.கே.மணி பங்கேற்றனர். இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 19 முதல் 24ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நாளை வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், 21,22,23 ஆகிய 3 நாட்கள் பட்ஜெட் மீது விவாதங்கள் நடப்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 24ஆம் தேதி முன்பண மானியக் கோரிக்கை மற்றும் நிதியமைச்சர், வேளாண் அமைச்சர் பதிலுரை நடைப்பெறும் என திட்டமிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.