’இலவச பயண திட்டத்தால் பேருந்தில் பயணிக்கும் மகளிர் எண்ணிக்கை 61% ஆக உயர்வு’

2022-2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் பட்ஜெட் தாக்கல் நடைப்பெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதல் முழுமையான நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ள அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கடந்த 10 மாத உழைப்பின்…

2022-2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் பட்ஜெட் தாக்கல் நடைப்பெற்றது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதல் முழுமையான நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ள அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கடந்த 10 மாத உழைப்பின் வெளிப்பாடு தாக்கல் செய்யப்படவுள்ள நிதி நிலை அறிக்கையில் தெரியவரும் என கூறியிருந்தார். அதன்படி, காலை 10 மணிக்கு தமிழ்நாடு பட்ஜெட் கூட்டம் தொடங்கியது.

தமிழ்நாடு பட்ஜெட் சிறப்பம்சங்கள்:

  • புதிய தொழில்நுட்பங்களுக்கு தேவையான பயிற்சி கட்டமைப்புகளை உருவாக்கவும், இடைவெளியை குறைக்கும் வகையில் புதிய பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்படும்
  • மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ.17,901.73 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • நகர்ப்புறப் பகுதிகளைப் பசுமையாக்கி, மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு 500 பூங்காக்கள் உருவாக்கப்படும்.
  • நீர்வளத் துறைக்கு ரூ.7,338.36 கோடி ஒதுக்கீடு; கடந்தாண்டை காட்டிலும் ரூ.4296.35 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கீடு.
  • மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதி திட்டம் என மாற்றியமைக்கப்படுகிறது
  • நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை மேம்பாட்டிற்கு ரூ.18,218 கோடி ஒதுக்கீடு; நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ.20,400 கோடி ஒதுக்கீடு
  • புதிய தொழிற் பூங்காக்கள் அமைக்கப்படுவதன் மூலம் ரூ.50,000 கோடி முதலீடு ஈர்க்கப்படும்; செய்யாறு & கும்மிடிப்பூண்டியில் சரக்கு வாகன மையம் அமைக்கப்படும்
  • கோயில்களை புனரமைக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு
  • பிரதமர் வீட்டு வசதி திட்டத்துக்கு ரூ.3,700 கோடி நிதி ஒதுக்கீடு
  • ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய பலன்களை வழங்க ரூ.19,000 கோடி ஒதுக்கீடு
  • காஞ்சிபுரம் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை 750 படுக்கை வசதிகளுடைய தன்னாட்சி அதிகாரம் பெற்ற உயர்தர மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும்;
  • ரூ.100 கோடி மதிப்பீட்டில் உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படும்.
  • ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்திற்கு ரூ.2,542 கோடி, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்திற்கு ரூ.1,949 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது – நிதியமைச்சர்
  • இலவச பயண திட்டத்தால் பேருந்தில் பயணிக்கும் மகளிர் எண்ணிக்கை 61% ஆக உயர்வு.
  • இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு ரூ.293 கோடி ஒதுக்கீடு.
  • ஏப்ரல் 1 முதல் மின்னணு ஒப்பந்த கொள்முதல் முறை செயல்படுத்தப்படும்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.