தந்தை பெரியாரின் சிந்தனைகளை புத்தகங்களாக அச்சிட ரூ.5 கோடி ஒதுக்கீடு

2022-23ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் தந்தை பெரியாரின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு 27 மொழிகளில் அச்சிடப்படும் என அறிக்கப்பட்டுள்ளது. பெரியாரின் சிந்தனை தொகுப்பு 21 இந்திய மற்றும் உலக மொழிகளில் அச்சு மற்றும் மின்நூல் பதிப்புகளாக…

2022-23ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் தந்தை பெரியாரின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு 27 மொழிகளில் அச்சிடப்படும் என அறிக்கப்பட்டுள்ளது.

பெரியாரின் சிந்தனை தொகுப்பு 21 இந்திய மற்றும் உலக மொழிகளில் அச்சு மற்றும் மின்நூல் பதிப்புகளாக வெளியிடப்படும் என சட்டப்பேரவையில் நிதித்துறைமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

2022-23-ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் சமூக நீதியை நிலைநிறுத்திடவும், பகுத்தறிவை பரப்பிடவும், பெண் அடிமைத்தனத்தை ஒழித்திடவும் தனது கடைசி மூச்சு உள்ள வரை அயராது உழைத்தவர் பெரியார் என்றும், அவரது சிந்தனைகளும் எழுத்துகளும் காலத்தை வென்று இன்றும் கூட ஒளிர்வதாகவும் கூறினார்.

மேலும், தனித்துவமிக்க அவரது எழுத்துகளை எட்டுத்திக்கும் எடுத்துச் சென்று, அவரது முற்போக்கு சிந்தனையால் அனைவரும் பயனடைய வைப்பது அரசின் கடமையாகும் என்று கூறிய அவர், இதை நிறைவேற்றும் விதமாக பரிந்துரை குழுவின் பரிந்துரைப்படி, பெரியாரின் சிந்தனை தொகுப்பு 21 இந்திய மற்றும் உலக மொழிகளில் அச்சு மற்றும் மின்நூல் பதிப்புகளாக வெளியிடப்படும் என்றும், இதற்காக ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.