திருப்பதி ஏழுமலையான் தரிசனம் – டிசம்பர் மாத டிக்கெட் முன்பதிவு தொடக்கம்!

டிசம்பர் மாதம் திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்கான ரூ.300 சிறப்பு தரிசன ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு இன்று வெளியிடப்படுகிறது. ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஏழுமலையானை தரிசிக்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு…

டிசம்பர் மாதம் திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்கான ரூ.300 சிறப்பு தரிசன ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு இன்று வெளியிடப்படுகிறது.

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஏழுமலையானை தரிசிக்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் இணையதளங்களில் முன்பதிவு செய்து தரிசிக்கும் முறை பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில், டிசம்பர் மாதம் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவையான 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை இன்று காலை 10 மணிக்கு திருப்பதி தேவஸ்தானம் ஆன்லைனில் வெளியிடுகிறது.

இதையும் படியுங்கள் : 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் – இந்தியாவுக்கு முதல் தங்கம்!!

அதன்படி டிசம்பர் 1-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை ஏழுமலையானை தரிசிப்பதற்கான ரூ.300 தரிசன டிக்கெட்டுகளை https://tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.