திருச்செந்தூர் வெயிலுகந்த அம்மன் கோயில் மாசித் திருவிழா துவங்கியது!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த வெயிலுகந்தம்மன் கோயிலில் மாசித்திருவிழா இன்று காலை (பிப்.3) கொடியேற்றத்துடன் தொடங்கியது.  அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த அருள்தரும் வெயிலுகந்தம்மன்…

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த வெயிலுகந்தம்மன் கோயிலில் மாசித்திருவிழா இன்று காலை (பிப்.3) கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த அருள்தரும் வெயிலுகந்தம்மன் திருக்கோயிலில் மாசித் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.  கொடியேற்றத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்,  அலங்காரம் தொடர்ந்து திருவிழா கொடிப்பட்டமானது திருக்கோயிலிலிருந்து புறப்பட்டு,  ரதவீதி மற்றும் மாடவீதிகள் வழியாக சென்று மீண்டும் கோயிலுக்கு வந்தடைந்தது.

அதிகாலை 5.28 மணிக்கு கொடிமரத்தில் காப்பு கட்டிய சரவணன் வல்லவராயர் திருவிழாக் கொடியினை ஏற்றினார்.  அதன் பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்டன.  தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது.  இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் காலை, மாலை இரு வேளைகளிலும் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறும். திருவிழாவின் பத்தாம் நாளன்று (பிப்.12) தேரோட்டம் நடைபெறும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.