திருச்செந்தூர்: குளியல் தொட்டியில் ஆனந்தமாக துள்ளி குதித்து விளையாடிய கோயில் யானை..!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் யானைக்காக புதிதாக அமைக்கப்பட்ட குளியல் தொட்டியில், யானை தெய்வானை ஆனந்தமாக துள்ளி குதித்து விளையாடியது. தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 27 யானைகளுக்கு, நவீன குளியல் தொட்டி…

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் யானைக்காக புதிதாக அமைக்கப்பட்ட குளியல் தொட்டியில், யானை தெய்வானை ஆனந்தமாக துள்ளி குதித்து விளையாடியது.

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 27 யானைகளுக்கு, நவீன குளியல் தொட்டி அமைப்பதற்கான அறிவிப்பை, அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சட்டப்பேரவையில் அறிவித்தார். இதன் ஒரு பகுதியாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் யானை தெய்வானைக்கு, 30 லட்சம் ரூபாய் மதிப்பில் குளியல் தொட்டி அமைக்கப்பட்டது.

சரவண பொய்கையில், அமைக்கப்பட்ட இந்த குளியல் தொட்டியை, அமைச்சர் சேகர் பாபு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதையடுத்து, குளியல் தொட்டியில் விடப்பட்ட யானை தெய்வானை, ஆனந்தமாக துள்ளி குதித்து விளையாடியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.