திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோயில் 2-ம் நாள் கந்த சஷ்டி திருவிழா!

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோயில் இரண்டாம் நாள் கந்த சஷ்டி திருவிழா நடைபெற்றது. திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் நடைபெறும் முக்கியமான திருவிழாக்களில் ஒன்றான கந்த சஷ்டி திருவிழா நேற்று காலை யாசாலை பூஜையுடன் துவங்கியது.  இத்திருவிழா…

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோயில் இரண்டாம் நாள் கந்த சஷ்டி திருவிழா நடைபெற்றது.

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் நடைபெறும் முக்கியமான திருவிழாக்களில் ஒன்றான கந்த சஷ்டி திருவிழா நேற்று காலை யாசாலை பூஜையுடன் துவங்கியது.  இத்திருவிழா தமிழ்நாடு மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானவர் கோயிலில் தங்கி விரதம் இருந்து வருகின்றனர்.

தொடர்ந்து 7 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெற்று வரும் இத்திருவிழாவின் இரண்டாம் நாளான இன்று அதிகாலை 3.00 மணி அளவில் கோயில் நடை திறக்கப்பட்டது.  விஸ்வரூப தீபாராதனையும்,  உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.  இதனைத் தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானை அம்பாளுடன் யாகசாலை மண்டபத்தில் எழுந்தருளினார்.

யாகசாலை பூஜைகள் வெகுவிமர்சயாக நடைபெற்றன.  சுவாமி ஜெயந்திநாதர்க்கு பால், பழம், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் பல்வேறு வகையான சிறப்பு அபிசேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.