தூத்துக்குடி தூப்பாக்கிச் சூடு சம்பவம்: சொன்னதை செய்து காட்டிய திமுக அரசு!

மதுரையில், தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு, அரசு வேலைக்கான பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தூத்துக்குடியில் கடந்த 2018ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. அதில், துப்பாக்கிச்சூட்டில்…

மதுரையில், தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு, அரசு வேலைக்கான பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தூத்துக்குடியில் கடந்த 2018ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. அதில், துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர்களில் 13 பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

இதனிடையே, மதுரையில் கொரோனா தொற்று நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் மற்றும் படுகாயம் அடைந்தோரின் குடும்பத்தினர் முதல்வரை சந்தித்தனர். பின்னர், மதுரையில் உள்ள ஆய்வு கூடத்தில் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், திமுக எம்பி கனிமொழி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.