நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 4 ஆயிரத்து 209 பேர் உயிரிழந்தனர்.
கொரோனா பாதிப்பு தொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 2 கோடியே 60 லட்சத்து 31 ஆயிரத்து 991 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், 2 லட்சத்து 59 ஆயிரத்து 591 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரே நாளில் 4 ஆயிரத்து 209 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 2 லட்சத்து 91 ஆயிரத்து 331 ஆக அதிகரித்துள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், 3 லட்சத்து 57 ஆயிரத்து 295 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை, 2 கோடியை 27 லட்சத்தை கடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் இதுவரை 19 கோடியே 18 லட்சத்து 79 ஆயிரத்து 503 பேருக்கு, கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.







