கொரோனா கட்டணம்: புகார் அளிக்க இலவச தொலைபேசி எண்!

தனியார் பரிசோதனை மையங்களில் கொரோனா பரிசோதனைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுமானால் அது குறித்து புகார் தெரிவிக்க, கட்டணமில்லா தொலைபேசி எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. தனியார் பரிசோதனை மையங்களில் கொரோனா பரிசோதனைக்கான கட்டணத்தை குறைத்து…

தனியார் பரிசோதனை மையங்களில் கொரோனா பரிசோதனைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுமானால் அது குறித்து புகார் தெரிவிக்க, கட்டணமில்லா தொலைபேசி எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

தனியார் பரிசோதனை மையங்களில் கொரோனா பரிசோதனைக்கான கட்டணத்தை குறைத்து புதிய கட்டண விகிதத்தை தமிழக அரசு நேற்று அறிவித்தது. அதன்படி தனியார் பரிசோதனை மையங்களில், முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், கொரோனா பரிசோதனை செய்வதற்கான கட்டணம் 800 ரூபாயில் இருந்து 550 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்ட பயனாளிகளாக இல்லாதவர்கள் தனியார் பரிசோதனை மையங்களில் ஆர்டி-பிசிஆர் கொரோனா பரிசோதனை செய்வதற்கான கட்டணம் 1,200 ரூபாயில் இருந்து 900 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆய்வகங்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அறிவித்துள்ளது. அதன்படி, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆய்வகங்கள் குறித்து 1800 4243 993 என்ற கட்டணமில்லா எண்ணிலோ அல்லது 104 என்ற கட்டணமில்லா எண்ணிலோ, பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்றும், அரசு அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.