தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத்தில் பிரார்த்தனை செய்த பாஜக மாநில தலைவர் அண்னாமலை!

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெற்கு பீச் ரோட்டில் அமைந்துள்ள பனிமய மாதா பேராலயத்திற்கு சென்று பிராத்தனையில் ஈடுபட்டார். தமிழ்நாடு பாஜக மாநில தலைவர்…

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெற்கு பீச் ரோட்டில் அமைந்துள்ள பனிமய மாதா பேராலயத்திற்கு சென்று பிராத்தனையில்
ஈடுபட்டார்.

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தூத்துக்குடி மாவட்ட பாஜக நிர்வாகியின் இல்ல திருமண விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் நேற்று கலந்து கொண்டார். அப்போது தூத்துக்குடி தெற்கு பீச் ரோட்டில் அமைந்துள்ள உலக புகழ் பெற்ற பனிமயமாதா பேராலயத்திற்கு சென்றார்.பேராலயத்திற்கு சென்ற அவரை பங்கு தந்தை குமாரராஜா வரவேற்று பேராலயத்திற்குள் அழைத்துச் சென்றார்.

அண்ணாமலை மெழுகுவர்த்திகளை பேராலயத்திற்கு காணிக்கையாக வழங்கி பிரார்த்தனை செய்தார். நிகழ்வில் அவருடன் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும், மாநில துணைத் தலைவருமான சசிகலா புஷ்பா, தூத்துக்குடி மாவட்ட பாஜக பொறுப்பாளர் சித்தரங்கன் மற்றும் திரளான பாஜக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

-வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.