பெண்களை மட்டும் குறிவைத்து வழிப்பறியில் ஈடுபட்ட வடமாநில இளைஞர் கைது!

சென்னையை அடுத்த படப்பை அருகே பெண்களிடம் கத்தியை காட்டி செல்போன் மற்றும் பணம் பறிப்பில் ஈடுபட்ட வடமாநில இளைஞரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த செல்போன்களை பறிமுதல் செய்துனர். தனியார் நிறுவனத்தில் வேலை…

சென்னையை அடுத்த படப்பை அருகே பெண்களிடம் கத்தியை காட்டி செல்போன் மற்றும் பணம் பறிப்பில் ஈடுபட்ட வடமாநில இளைஞரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த செல்போன்களை பறிமுதல் செய்துனர்.

தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஐஸ்வர்யா என்பவர் காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அண்ணா நகரில் தங்கி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் வேலையை முடித்துவிட்டு அறைக்கு தனியாக நடந்து சென்றுள்ளார்.

இதை அறிந்த மர்ம நபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி  மிரட்டி ஐஸ்வர்யாவை கீழே தள்ளினார். பின்பு அவர் கையில் இருந்த விலையுயர்ந்த செல்போன் மற்றும் ரூ.10,000-ஐ பறித்து சென்றுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அருகே உள்ள மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார்
அளித்தார். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மர்ம நபர் அணிந்திருந்த கை சட்டை அடையாளத்தை கொண்டு அப்பகுதியில் சுற்றி திரிந்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் மேற்கு வங்கத்தை சேர்ந்த பப்லு என்பவர் கொத்தானார்
வேலைக்காக மூன்று நாட்களுக்கு முன்னால் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார்.அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இதுவரை 10 பெண்களிடம் கத்தியை காட்டி திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்த மணிமங்கலம் போலீசார், 10 விலையுயர்ந்த செல்போன்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

-ம. ஶ்ரீ மரகதம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.