திருவண்ணாமலை அருகே, கந்துவட்டி கொடுமையால் விஷம் குடித்து உயிரை மாய்த்துக் கொண்ட விவசாயியின் சடலத்துடன் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை அடுத்த சின்னபாலிபட்டு கிராமத்தைச் சேர்ந்த ராமஜெயம் என்பவர் செங்கல் சூளை மற்றும் விவசாயம் லாரியை வாடகைக்கு விட்டு வருகிறார். விவசாய பணிகளுக்கு கோட்டங்கள் கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு என்பவரிடம் ராமஜெயம் கந்துவட்டிக்கு சில வருடங்களுக்கு முன்பாக ரூபாய் ஒரு லட்சம் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் மாதந்தோறும் 15000 வட்டி கட்டி வந்த நிலையில் வட்டித் தொகையை சுமார் ஏழு இலட்சத்தை கடந்த பிறகும் மேலும் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாகவும். இந்த நிலையில் ராமஜெயத்தின் குடும்பத்தினர் தங்களுக்கு தெரியாமல் பணம் கொடுக்க வேண்டாம் என்று கூறியிருந்தும் மீண்டும் பணத்தை கொடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராமஜெயத்துக்கு சொந்தமான பாகப்பிரிவினையில் வந்த 0.95 சென்ட் வீட்டுடன் கூடிய நிலத்தை வடிவேலு தனது பெரிய மகன் பெயரில் கிரையம் எழுதி வாங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த ராமஜெயம் நேற்று மாலை விவசாய பணிகளுக்கு உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை வாங்கி வந்ததாக சொல்லப்படுகிறது கந்து வட்டி கொடுமையால் மனமுடைந்த ராமஜெயம் நேற்று மாலை விஷம் குடித்து உயிரை மாய்த்துக் கொண்டர்.
இந்தநிலையில் கந்துவட்டி கொடுமையால் உயிரிழந்த ராமஜெயத்துக்கு உரிய நியாயம் கிடைக்க கோரி திருவண்ணாமலை செங்கம் சாலையில் ஒட்டகுடிசல் கிராமம் அருகில் ராமஜெயம் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து அங்கு விரைந்து வந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி சாலை மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் படுத்தி உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததை அடுத்து ராமஜெயத்தின் உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனைத்தொடர்ந்து போலீசார் ராமஜெயத்தின் பிரேதத்தை கைப்பற்றி திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.