ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு: உசிலம்பட்டி அருகே நிகழ்ந்த சோகம்

உசிலம்பட்டி அருகே கடன் பிரச்சனை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் விஷம் குடித்து உயிரை மாய்த்துக்  கொண்டனர். மதுரை உசிலம்பட்டி அருகே நகைப்பட்டறை வைத்திருப்பவர் சரவணன். இவருக்கு ஸ்ரீநிதி பூங்கோதை என்ற…

உசிலம்பட்டி அருகே கடன் பிரச்சனை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் விஷம் குடித்து உயிரை மாய்த்துக்  கொண்டனர்.

மதுரை உசிலம்பட்டி அருகே நகைப்பட்டறை வைத்திருப்பவர் சரவணன். இவருக்கு ஸ்ரீநிதி பூங்கோதை என்ற மனைவியும், மகள்கள் மகாலட்சுமி, அபிராமி மற்றும் மகன் அமுதன் ஆகியோரும் உள்ளனர். சில மாதங்களாகச் சரவணனுக்கு கடன் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதை எப்படி சமாளிப்பது என்று சரவணன் திணறியுள்ளார். இதனால் மன உலைச்சலில் அவரும் அவரது குடும்பமும் தவித்தனர் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

நிலைமை கை மீறிச் சென்றதாகக் கருதிய சரவணனும் அவரது குடும்பத்தாரும் விஷம் குடித்து உயிரை மாய்த்துக் செய்துள்ளனர். சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் 5 பேரின் உடலைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர்கள் உயிரை மாய்த்துக் செய்வதற்கு முன் கடிதம் எழுதி வைத்துள்ளனர் என்று இவ்வழக்கை விசாரித்து வரும் காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.