190 முறை ஏடிஎம் கார்டு பயன்படுத்தி ரூ.16 லட்சம் கொள்ளை!

சென்னை பெரியமேடு – வேப்பேரி நெடுஞ்சாலையில் உள்ள SBI ATM-யில் 190 முறை ஏடிஎம். கார்டு பயன்படுத்தி ரூ.16 லட்சம் பணம் கொள்ளை அடித்திருப்பது தெரியவந்துள்ளது. பெரியமேடு SBI வங்கிக்கிளை மேலாளர் நேற்று மாலை…

சென்னை பெரியமேடு – வேப்பேரி நெடுஞ்சாலையில் உள்ள SBI ATM-யில் 190 முறை ஏடிஎம். கார்டு பயன்படுத்தி ரூ.16 லட்சம் பணம் கொள்ளை அடித்திருப்பது தெரியவந்துள்ளது.

பெரியமேடு SBI வங்கிக்கிளை மேலாளர் நேற்று மாலை ஏடிஎம்-க்கு சென்று சோதனை செய்தபோது பணம் நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

பெரியமேடு -வேப்பேரி நெடுஞ்சாலையில் உள்ள SBI ATM-யில் கடந்த 15, 16 மற்றும் 17-தேதிகளில் ஏ.டி.எம் கார்டு பயன்படுத்தி 190 முறை ரூபாய் 16 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

சென்னையில் கடந்த சில தினங்களாக பெரியமேடு, பெரம்பூர், வடபழனி, தரமணி, விருகம்பாக்கம், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ரூ.20 லட்சம் வரை ஏடிஎம்களில் நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இந்த கொள்ளை சம்பவத்தை ஈடுபட்டிருப்பது டெல்லி,ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இதனையடுத்து தமிழக காவல் துறையினர் மூன்று தனிப்படைகள் அமைத்து டெல்லி, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விசாரணைக்காகச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் நேற்று சென்னை பெரியமேடு – வேப்பேரி நெடுஞ்சாலையில் உள்ள SBI ATM-யில் மட்டும் 190 முறை ஏடிஎம் கார்டு பயன்படுத்தி ரூ.16 லட்சம் கொள்ளையடித்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று ஏடிஎம் கொள்ளை தொடர்பாக அளித்த பேட்டியில், “தமிழகம் முழுவதும் கடந்த 17, 18 மற்றும் 19 தேதிகளில் SBI வங்கி ஏடிஎம்களில் மட்டும் இதுவரை ரூபாய் 48 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அதில் சென்னையில் மட்டும் 7 புகார்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது 8-வது புகாராகச் சென்னை பெரியமேடு – வேப்பேரி நெடுஞ்சாலையில் ஏடிஎம் கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.