கோயில் உண்டியலை உடைத்து ரூ.15,000 கொள்ளை-பக்தர்கள் அதிர்ச்சி

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த கே.ஜி.கண்டிகையிலுள்ள பழமை வாய்ந்த ஸ்ரீகற்பக விநாயகர் கோயில் உண்டியலை உடைத்து சுமார் பதினைந்தாயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த கே.ஜி.கண்டிகை நகரில் சுமார் நாற்பது…

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த கே.ஜி.கண்டிகையிலுள்ள பழமை வாய்ந்த ஸ்ரீகற்பக விநாயகர் கோயில் உண்டியலை உடைத்து சுமார் பதினைந்தாயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த கே.ஜி.கண்டிகை நகரில் சுமார் நாற்பது ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீகற்பக விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்றி நள்ளிரவு யாரும் இல்லாத நேரம் பார்த்து புகுந்த மர்ம நபர்கள் கோயில் முன் பீடத்தில் இருந்த உண்டியலை உடைத்து 15,000 ரூபாய் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

இன்று காலையில் கோயிலுக்கு சாமி கும்பிட வந்திருந்த பக்தர்கள் இதனை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து கோயில் நிர்வாகி கார்த்தி என்பவர் புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் மாநில நெடுஞ்சாலையிலுள்ள சிசிடிவி கேமராக்களின் உதவியுடன் கொள்ளையர்களை கண்டறியும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.