திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் காவல் உதவி ஆய்வாளரை பொய் வழக்கு போட்டு தங்களது மகனின் எதிர்காலத்தை சிதைக்க முயற்சிப்பதை கண்டித்து தீக்குளிக்க முயன்ற தம்பதியினரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் வெங்கத்தூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் கணவன்,மனைவி சுடர்மணி மற்றும் செல்வி. இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர்.இவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவருடைய மகன் நவீன்குமார் என்பவர் ஐடிஐ முடித்து விட்டு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.இந்நிலையில் கடந்த ஆண்டு பக்கத்தூரில் நடந்த அடிதடி பிரச்னையில் இவர்களுக்கு வேண்டாத நபர்கள் சிலர் நவீன்குமார் பெயரையும் கலவரத்தில் ஈடுபட்டதாக கொடுத்துள்ளனர்.இதனால் அவரது பெயரும் வழக்கில் சேர்க்கப்பட்டது.
இதனை தொடர்ந்து சென்னை உயர்நீதி மன்றத்தில் முன் ஜாமீன் பெற்றுள்ளனர். எனினும் சட்டத்திற்கு புறம்பான வகையில் பலமுறை அதிகாலையில் நவீன்குமாரை விசாரணை என்ற பெயரில் காவல் நிலையம் அழைத்து செல்லும் போலீசார் இரவு வரை காத்திருக்க வைத்துள்ளனர்.
மேலும் நவீனின் இரண்டு வாகனங்களையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இது குறித்து அவரது பெற்றோர் கேட்டப்போது உங்கள் மகன் மீது 110 வழக்கு உள்ளது என்று கூறியுள்ளனர். எதற்கு தங்கள் மீது பொய் வழக்கு போடுகிறீர்கள் என்று கேட்டப்போது அவர்களை மிரட்டி குடும்பத்துடன் ஜெயிலுக்கு அனுப்பி விடுவதாக கூறியுள்ளார்.
என்ன செய்வதறியாது நிலையில் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாக அங்கு பணியில் இருந்த போலீசாரிடம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அவர்களிடம் மனுக்களை பெற்றுகொண்ட அதிகாரிகள் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.தொடர்ந்து அவர்கள் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
-வேந்தன்







