நடிகர் பார்த்திபன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
திருமதி ரஜினியின் அன்பான அழைப்புடன் நேற்று காலை சாரை சந்தித்தேன்.
10 மணிக்கு சந்திப்பு,10 நிடங்களுக்கு முன்பே வரவேற்பறையில் நான். (நேரம் தவறாமை மட்டுமல்ல, 10 நிமிடமாவது முன் செல்வது என் பழக்கம்)
கு’டீ’ கேட்கப்பட்டது ,நீர் போதுமென்றேன்.( டீக்கு டிமிக்கி)”நீங்க ரெடின்னா சார் வரலாமா? எனக் கேட்டார்” -கேட்டார் பணியாளர். (புதிய பண்பு) உண்மைக்கு நெருக்கமான நட்புக்கு இலக்கணமானவருடன் சுவாரஸ்யமான உரையாடல் என்ன என்பது அந்த என்பது நிமிட முள்ளும் மலரும் படியாக இனிமையாக இருந்தது.
“உங்கக் கண்ணைப் பாத்து நீங்க ஹீரோவா வருவீங்கன்னு எப்பவோ கணிச்சேன்” ஆரம்பித்தார்.
yes! என் புதிய பாதைக்கு முன்பாகவே ஹேம்நாக் பாபுஜி என்பவரிடம் என்னை வைத்து படமெடுக்க சிபாரித்தார். “Solo act single shot மாதிரி யாரும் பண்ணாத்தை எல்லாம் பண்ணி அசத்துறீங்க” பாராட்டினார். அடுத்து முழுக்கக் கமர்ஷியல் வெற்றியே goal என்றேன். அதற்கும் சில யோசனை தந்தார்.
CM சந்திப்பு உட்பட்ட , திரித்து பேசப்பட்ட சில சர்ச்சைகள் உட்பட எல்லாவற்றையும் கவனித்து கணித்து கருத்துக் கூறினார். மனம் விட்டு நிறைய பேசினோம்.
ஒரு அழகான writing pad-ல் சில வெற்றுத் தாள்களை வைத்து அதில் என்ன எழுதாமல் எழுதப்பட்டிருக்கிறது என்று கடைசி பக்கத்தில் எழுதிக் கொடுத்ததைப் பார்த்து “ உங்க creativity spl தான் , உங்களுக்கான spl நேரம் விரைவில் வரும்” வாழ்த்தினார். வழக்கம் போல வாசல் வரை வந்து வழியனுப்பினார். வந்த பின்னும் வராமல் அங்கேயே அவரின் அன்பை ,எளிமையை அசைப்போட்டுக்கொண்டு அமர்ந்திருக்கிறேன்…. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதனை அவர் வீடியோவாகவும் வெளியிட்டுள்ளார்.




