தமிழ் நாடு முதலமைச்சர் மரிய வில்சன் இன்று மாநிலத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். அதன் முக்கிய அம்சங்கள்:
தமிழ் நாட்டின் கடன் எவ்வளவு…?
- தமிழ் நாட்டின் ஒட்டுமொத்த நிதிப் பொறுப்புகள் சுமார் ரூ.13.18 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளன. இதில், மாநிலத்தின் நிலுவையில் உள்ள நேரடிக் கடன் மட்டும் ரூ.10 லட்சம் கோடி ஆகும்.
- தமிழ்நாட்டில் 2020-21ல் ரூ.67,087 ஆக இருந்த, தனிநபர் மீதான கடன், 2025-26ல் ரூ. 1,28,934 ஆக உயர்ந்துள்ளது.
இரு மடங்காக உயர்வு
- மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் கீழ் கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநிலத்தின் கடன் சுமை கிட்டத்தட்ட இருமடங்காகியுள்ளது. 2021 – 26 திமுக ஆட்சிக்கும் முன் தமிழ் நாட்டின் நேரடிக் கடன் சுமார் ரூ. 4.8 லட்சம் கோடியாக இருந்தது. இது தற்போது கிட்டத்தட்ட ரூ. 10 லட்சம் கோடியாகக் உயர்ந்துள்ளது.
- பட்ஜெட்டிற்கு அப்பாற்பட்ட கடன்கள், உத்தரவாதங்கள் உள்ளிட்டவற்றை சேர்க்கும்போது, மாநிலத்தின் மொத்த நிதிச்சுமை ரூ. 13.18 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.
- கடந்த ஐந்து ஆண்டுகளில் வாங்கப்பட்ட கடன், முந்தைய 60 ஆண்டுகளில் வாங்கப்பட்ட மொத்தக் கடனை விட அதிகமாகும்.
- கடன்களில் கணிசமான பகுதி உள்கட்டமைப்பு சொத்துக்களை உருவாக்குவதற்குப் பதிலாக அன்றாடச் செலவினங்களைச் சமாளிக்கவே பயன்படுத்தப்பட்டுள்ளது.
வருவாய் பற்றாக்குறை அதிகரிப்பு
- தமிழகத்தின் நிலுவையில் உள்ள கடன்-மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி விகிதம் 28.2 சதவீதமாக உள்ளது.
- கடந்த ஐந்து ஆண்டுகளில் வருவாய் பற்றாக்குறை ரூ.46,538 கோடியிலிருந்து ரூ.78,324 கோடியாக அதிகரித்துள்ளது.
- இது, வருவாய் வரவுக்கும் செலவினத்திற்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டுகிறது.
- அரசு ஈட்டும் ஒவ்வொரு ரூபாய்க்கும் 22.8 பைசா வட்டி செலுத்துவதற்காகச் செலவிடப்படுகிறது.
- சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாயில் 5.45 சதவீத வளர்ச்சி பதிவாகியுள்ளது. இது, செலவினங்கள் மற்றும் கடன் சேவைப் பொறுப்புகளில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பை ஈடுகட்டப் போதுமானதாக இல்லை.
மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில்…
- தமிழ்நாட்டின் கடன் நிலையை மற்ற இந்திய மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், குஜராத்தின் கடன் விகிதம் 17.6 சதவீதமாகவும், மகாராஷ்டிராவின் கடன் விகிதம் 19.7 சதவீதமாகவும், கர்நாடகாவின் கடன் விகிதம் 23.4 சதவீதமாகவும் உள்ளது.
- அதே சமயம், தமிழ்நாட்டின் கடன் விகிதம் 28.3 சதவீதமாக உள்ளது.




