பொள்ளாச்சி விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என மேடையில் இருந்த முதல்வரிடம் பிரதமர் மோடி கேட்டாரா என திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கத்திற்கு ஆதரவாக திருப்புல்லாணி பகுதியில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பரப்புரை மெற்கொண்டார். அப்போது பேசிய அவர், ஹத்ரா சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் ஏன் பிரதமர் மோடி எதுவும் பேசவில்லை என சாடினார்.
மேலும், உத்திரப்பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரோடு இளம்பெண் எரிக்கப்பட்ட செயல், பெண்களை அவமதிக்கவில்லையா என வினவினார். தொடர்ந்து பேசிய அவர், பெண்கள் குறித்து ஹெச்.ராஜா பேசியதை கேட்க பிரதமருக்கு தைரியம் இல்லை எனவும் குற்றம் சாட்டினார்.







