திமுக கூட்டணியை எதிர்த்து நிற்கக்கூடிய தகுதியை அதிமுக இழந்துவிட்டது :திருமாவளவன்!

திமுக கூட்டணியை எதிர்த்து நிற்கக்கூடிய தகுதியை அதிமுக இழந்துவிட்டதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். சீர்காழி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் பன்னீர்செல்வத்தை ஆதரித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்…

திமுக கூட்டணியை எதிர்த்து நிற்கக்கூடிய தகுதியை அதிமுக இழந்துவிட்டதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

சீர்காழி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் பன்னீர்செல்வத்தை ஆதரித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், திமுக கூட்டணியை எதிர்த்து நிற்கக்கூடிய தகுதியை அதிமுக இழந்துவிட்டதாகவும், 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணியை எதிர்த்து நிற்பது பாஜகதான் என்றும் கூறினார். விவசாயிகளுக்கும், சமூக நீதிக்கும் எதிரான கட்சி பாஜக என குற்றம் சாட்டிய திருமாவளவன், அதிமுக தலைவர்கள் சிலர், தங்கள் கட்சியையும், தமிழகத்ததையும் பாஜகவிடம் அடகு வைத்துவிட்டதாக விமர்சித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.