பிரதமர் மோடிக்கு கமல்ஹாசன் கேள்வி!

தமிழர்கள் மீது பிரதமருக்கு உண்மையான அன்பு இருக்குமானால், ஐ.நாவில் இலங்கை அரசுக்கு எதிராக நடந்த வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது ஏன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை விமான…

தமிழர்கள் மீது பிரதமருக்கு உண்மையான அன்பு இருக்குமானால், ஐ.நாவில் இலங்கை அரசுக்கு எதிராக நடந்த வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது ஏன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசனிடம், மக்கள் நீதி மையம் ஒரு சூப்பர் நோட்டா என்று காங்கிரஸ் எம்.பி. கார்த்திக் சிதம்பரம் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் கூறலாம் என்று தெரிவித்த கமல்ஹாசன், சிந்தித்து பேசுவதுதான் சிறந்தது என்று குறிப்பிட்டார். மக்கள் நீதி மய்யத்தின் பிரச்சார வியூகத்திற்கு மக்களிடையே அமோக வரவேற்பு இருப்பதாகவும் கமல்ஹாசன் தெரிவித்தார்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.