பாஜகவை உள்ளே விட்டால் அமைதி கெட்டு விடும்: புதுச்சேரி பரப்புரையில் திருமா

விடுதலை சிறுத்தை கட்சிக்காக கடும் வெயிலைக்கூட பொருட்படுத்தாமல் உழைக்கும் தொண்டர்களுக்கு தேனீர் வாங்கிக் கொடுக்க கூட எங்களிடம் பணம் இல்லை இதனால் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் நிலையில் தாங்கள் இல்லை என்று விடுதலை சிறுத்தை…

விடுதலை சிறுத்தை கட்சிக்காக கடும் வெயிலைக்கூட பொருட்படுத்தாமல் உழைக்கும் தொண்டர்களுக்கு தேனீர் வாங்கிக் கொடுக்க கூட எங்களிடம் பணம் இல்லை இதனால் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் நிலையில் தாங்கள் இல்லை என்று விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன் புதுச்சேரியில் நடந்த தேர்தல் பரப்புரையில் தெரிவித்துள்ளார்.

புதுவை சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு தொகுதியில் போட்டியிடுகிறது. இந்நிலையில் விடுதலை சிறுத்தைக் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் புதுச்சேரி, உழவர்கரை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தை கட்சி வேட்பாளர் அங்காளனை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர்’ பாஜகவை உள்ளே நுழைய விட்டால் அமைதி கெட்டு விடும். இதனால் பாஜக ஆட்சி அமைய இடம் கொடுத்து விடக்கூடாது.

இரு மாநில மக்களின் நலனுக்காக காங்கிரஸ், திமுகவோடு நீண்டநாட்களாக இணைந்து பணியாற்றி வருகின்றோம். .

கடும் வெயிலில் சுற்றும் தொண்டர்களுக்கு தேனீர் வாங்கி கொடுக்கக்கூட எங்களிடம் காசு இல்லை. அதனால் ஒட்டுக்காக எங்களால் பணம் கொடுக்க முடியாது

ஓட்டுக்காக பல கோடிகளை சுருட்டி வைத்துக்கொண்டு, அதில் ஒரு சதவிதத்தை வாக்குக்கு பணமாக சில கட்சியினர் கொடுக்கின்றார்.

காங்கிரஸ் அரசை நீக்க வேண்டும் என்பதற்காக பாஜகவை தோளில் சுமக்கும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு நாம் பாடம் புகட்ட வேண்டும்.

எந்த கட்சி எம்.எல்.ஏ வையும் பாஜக விலை பேச முடியும். ஆனால் எங்களை விலை பேச முடியாது.

பணம் கொடுப்பவர்களுக்காக ஓட்டு போட வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றி நம் உரிமையின் விலையின் மதிப்பை உணர்ந்து விடுதலை சிறுத்தை கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும்’

இவ்வாறு அவர் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.