ஏழ்மையை ஒழிக்க மக்கள் நீதி மய்யம் அதிகாரத்தை கைப்பற்றுவது தான் ஒரே தீர்வு என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் புளியகுளம், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். பெரியார் நகரில் பொதுமக்கள் மத்தியில் பேசிய கமல், கோவை தெற்கு தொகுதி தமிழகமே திரும்பிப் பார்க்கும் தொகுதியாக மாறப்போகிறது எனத் தெரிவித்தார்.
இந்த தொகுதியில் பணப்பட்டுவாடா தொடங்கி விட்டதாக குற்றம்சாட்டிய அவர், அரசியல் கட்சிகள் கொடுக்கும் பணம் மக்களின் ஏழ்மையை போக்காது என்றார். மேலும் மக்கள் நீதி மய்யம் அதிகாரத்தை கைப்பற்றினால்தான் ஏழ்மையை ஒழிக்க முடியும் என்றும் கமல்ஹாசன் கூறினார்.







