ரிப்பன் மாளிகை முன் தூய்மை பணியாளர்கள் நள்ளிரவு முதல் தர்ணா போராட்டம்!

சென்னை ரிப்பன் மாளிகை வாசலில் நள்ளிரவு முதல் தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை சென்ட்ரல் அருகே ரிப்பன் மாளிகை வாசலில் தூய்மை பணியாளர்கள் நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை வரை தொடர்ந்து அமைதியான முறையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தூய்மை பணியாளர்களின் பணியை நிரந்தரம் செய்யக்கோரி மண்டலம் 5 மற்றும் மண்டல 6 ஆகிய இடங்களில் பணி செய்து வந்த தூய்மை பணியாளர்கள் ரிப்பன் மாளிகை சாலையில் அமர்ந்து தங்களுக்கான உரிமைகளை வழங்க கோரி தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சென்னை மாநகராட்சி ஆணையரின் பேச்சை கேட்காமல் அரசு பணிகளை வழங்க கோரி கோஷமிட்டுள்ளனர்.

மேலும் தூய்மை பணியாளர்களாளான நாங்கள் 2026ஆம் ஆண்டுக்கான விழா கொண்டாட கூடாதா? 2026ல் தொடங்கும் புத்தாண்டில் தூய்மை பணியாளர்கள் நாங்கள் வாழ்வதா? சாவதா? என கோஷம் எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம், எங்களுடைய தோல்வியை ஒற்றுக்கொள்ள மாட்டோம் எனவும், தங்களின் அமைப்பின் மூலம் பேச்சுவார்த்தை நடத்த கோரி கோஷம் எழுப்பியுள்ளனர். தொடர்ந்து சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கபட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.