இந்துக்களை அவமதிப்பதில் காங்கிரஸுக்குள் போட்டி: யோகி ஆதித்யநாத்

இந்துக்களை அவமதிப்பதில் காங்கிரஸ் கட்சிக்குள் போட்டி நிலவுவதாக உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குற்றம் சாட்டியுள்ளார். இந்துக்களை அவமதிப்பதில் காங்கிரஸ் கட்சிக்குள் போட்டி நிலவுவதாக உத்தரப்பிரதேசத்தின் தெஹ்ரி பகுதியில் பேரணி ஒன்றை தொடக்கிவைத்த அம்மாநில…

இந்துக்களை அவமதிப்பதில் காங்கிரஸ் கட்சிக்குள் போட்டி நிலவுவதாக உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்துக்களை அவமதிப்பதில் காங்கிரஸ் கட்சிக்குள் போட்டி நிலவுவதாக உத்தரப்பிரதேசத்தின் தெஹ்ரி பகுதியில் பேரணி ஒன்றை தொடக்கிவைத்த அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குற்றம் சாட்டியுள்ளார். பேரணியில் பேசிய அவர், “ராமர் கோயில் கட்டுவதற்கு எதிராகவே காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது. இந்துக்களை அவமதிக்க காங்கிரஸுக்குள் போட்டி நிலவுகிறது. தாங்கள் இந்துக்களா இல்லையா என்று தெரியாதவர்கள் இப்போது அதன் அர்த்தத்தை வரையறுக்கிறார்கள்” என்று பேசினார்

தொடர்ந்து பேசிய அவர், “உங்களை இந்து என்று சொல்வதில் பெருமை கொள்ளுங்கள். இந்து என்பது வகுப்புவாத வார்த்தையல்ல, இது நமது கலாச்சாரத்தின் அடையாளம்” விவேகானந்தர் கூறியுள்ளார் என அவர் பேசினார். மேலும், “காங்கிரஸ் கட்சிக்கு ராமர் கோயில் கட்டுவதில் அக்கறையில்லை. அவர்கள் ராமர் கோயிலை கட்டவேண்டும் என்றால் 1947லேயே கட்டியிருக்கலாம். ஆனால் அவர்களின் ஒவ்வொரு செயல்பாடுகளும் கோயிலை கட்டுவதற்கு எதிர்ப்பாகவே அமைகிறது. இந்தியாவின் தேச நம்பிக்கையை அவமதிக்கும் வாழும் அடையாளமாக காங்கிரஸ் கட்சி இருந்துவருகிறது” என்று பேசினார்.

உத்தரகாண்ட் மாநில தேர்தல் குறித்து பேச தொடங்கிய யோகி ஆதித்யநாத், “நாட்டிலேயே பாதுகாப்பான மாநிலமாக உத்தரப்பிரதேசம் இருந்துவருகிறது. பாதுகாப்பு விசயத்தில் உத்தரப்பிரதேசம் மிகுந்த கவனத்துடன் உள்ளது. அடுத்த தேர்தல் நடக்கவுள்ள உத்தரகாண்டில் தீவிர வாதிகள் நுழைய வாய்ப்புள்ளது. அந்த மாநிலத்தையும் காப்பது நமது கடமையே. பாதுகாப்பைப் பொருத்தவரை உத்தரகாண்டை இன்னொரு உத்தரப்பிரதேசமாக மாற்ற வேண்டும்” என்று பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.