காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் , மாநிலங்களுக்கு ஏற்றவாறு நீட் தேர்வு ரத்து ; கே.எஸ். அழகிரி.

மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மாநிலங்களுக்கு ஏற்றவாறு நீட் தேர்வு ரத்து செய்யப்படும் எனத் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்…

மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மாநிலங்களுக்கு ஏற்றவாறு நீட் தேர்வு ரத்து செய்யப்படும் எனத் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் ரமேஷ் சென்னிதலா ஆகியோர் தேர்தல் பிரச்சாரத்திற்காக இன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்தனர். பின்னர் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள காமராஜர் சிலை அருகே நாகர்கோவில் மாநகராட்சியின் திமுக காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த கே. எஸ். அழகிரி கூறுகையில் ” தமிழகச் சட்டமன்றத்தில் நீட் தேர்வு தேவையில்லை என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றிய பிறகு அதனை மறுத்துப் பேச கவர்னர் யார்? ஜனாதிபதி யார்? என்று கேள்வி எழுப்பினார்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அந்தந்த மாநிலங்களின் வசதிக்கு ஏற்ப நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என ஏற்கனவே ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.அவர் எளிமையாக கூறிய இந்த பதில் தான் உண்மை. இதைப் புரிந்து கொள்ளாத மோடி சிரமப்படுகிறார். எனவே மோடி தமிழக மக்களின் உணர்வுகளை மாணவர்களின் உரிமை புரிந்து கொள்ள வேண்டும். எங்களை வாழ விடுங்கள் என்றுதான் மோடியிடம் நாங்கள் கேட்கிறோம் என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி தொகுதி எம்பி விஜய் வசந்த், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக நாகர்கோவில் மாநகராட்சியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களைச் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார் கே. எஸ். அழகிரி.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.