ஜன நாயகன் லீக் தணிக்கை வாரியம் தரப்பில் நிகழ்ந்ததா…? – குற்றச்சாட்டுகளுக்கு CBFC மறுப்பு…!

ஜன நாயகன் திரைப்படக் கசிவு குறித்து  தொடர்பாக மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் (CBFC) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

நடிகர் விஜயின் ஜன நாயகன் திரைப்படம் தியேட்டரகளில்  வெளியாவதற்கு முன்பே இணையத்தில் கசிந்தது ஒட்டு மொத்த திரையுலகினரையுமே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த கசிவிற்கு பல்வேறு தரப்பினர் மீது குற்றசாட்டுகள் முன் வைக்கப்பட்டு வருகிறது. அதில் ஒன்றாக ஜன நாயகன் திரைப்படம் தணிக்கை சான்றிதழ் பெறும் பணியில் இருப்பதால் இந்த கசிவு தணிக்கை வாரியம் சார்பில் நிகழ்ந்திருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஜன நாயகன் திரைப்படக் கசிவு குறித்து  தொடர்பாக மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் (CBFC) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது ;

மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்திலிருந்து (CBFC) தமிழ்த் திரைப்படமான “ஜன நாயகன்” கசிந்ததாகக் கூறும் செய்திகள் ஆதாரமற்றவை மற்றும் தவறானவை.

சான்றிதழுக்காகச் சமர்ப்பிக்கப்படும் அனைத்துத் திரையரங்குத் திரைப்படங்களுக்கும் பாதுகாப்பான KDM (Key Delivery Message) முறையைப் பின்பற்றுவதாக CBFC தெளிவுபடுத்தியுள்ளது.

உள்ளடக்கத்திற்கான அணுகல் கடவுச்சொல் மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளது, மேலும் KDM ஆனது தயாரிப்பாளர்/திரைப்படத் தயாரிப்பாளரிடமே முழுமையாக இருக்கும். செல்லுபடியாகும் KDM இல்லாமல், திரைப்படத்தை அணுகவோ பார்க்கவோ முடியாது.

“ஜன நாயகன்” திரைப்படத்தின் டிஜிட்டல் சினிமா தொகுப்பு (DCP), மார்ச் 17 அன்று மும்பையில் உரிய ஒப்புதலுடன் விண்ணப்பதாரரிடம் ஒப்படைக்கப்பட்டது, அது அன்று முதல் அவர்களிடமே உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டடுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.