முக்கியச் செய்திகள் கொரோனா சினிமா

ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு உதவ நடிகை நிக்கி கல்ராணி புது முயற்சி!

கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்களுக்கு உதவும் முயற்சியில் இறங்கி இருக்கிறார் நடிகை நிக்கி கல்ராணி. அதைப்பற்றி பார்ப்போம்…

மரகத நாணயம், மொட்டசிவா கெட்ட சிவா, கலகலப்பு – 2, உள்ளிட்ட தமிழ்ப் படங்களிலும், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிப் படங்களிலும் நடித்து புகழ்பெற்றவர் நடிகை நிக்கி கல்ராணி. தமிழில் இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடித்த டார்லிங் என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எப்படி உதவலாம் என்று யோசித்த நடிகை நிக்கி கல்ராணி , ஏழை மக்களுக்கு உதவுவதற்காக புதுமையான முயற்சியில் இறங்கி இருக்கிறார். அண்மைக்காலமாக இணையத்தில் பிரபலமடைந்து வரும் த்ரிப்ட் ஷாப்பிங் என்ற முறையை தற்போது அவர் கையாளத் தொடங்கியுள்ளார்.

தம்முடைய இன்ஸ்டா பக்கத்தில், அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,
நான் எப்போதுமே எளிமையாக இருக்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் குறைவானதே நிறைவு. எனது இந்தக் கொள்கை எனது ஆடைகளுக்கும் பொருந்தும். இருப்பினும், பலரைப் போல் காலப்போக்கில் எனது தேவைகளை மிஞ்சி எனது உடைமைகள் சேர்ந்திருப்பதை உணர்ந்தேன். இதனால் எனது தேவையைத் தாண்டி இருப்பவற்றை நல்ல காரியங்களுக்கு பயன்படுத்த விரும்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

பலகட்ட திட்டமிடுதலுக்குப் நிக்கி கல்ராணி, ஒரு குழுவை உருவாக்கி, “Take 2 – Thrift to Uplift” என்ற முயற்சியை முன்னெடுத்துள்ளார். இங்கு தானமாக பெறப்படும் அனைத்துப் பொருட்களும் விற்கப்பட்டு, அதில் கிடைக்கும் பணம் தேவையுள்ளவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த பயன்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தகவல்களுக்கு @take2_thrifttouplift இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடருங்கள் என நடிகை நிக்கி கல்ராணி குறிப்பிட்டுள்ளார்.

மக்களுக்கு உதவ விருப்பமுள்ள அனைவரும் நேசித்த இப்போது உபயோகிக்காத நலல தரத்தில் உள்ள ஆடைகள், அணிகலன்கள், புத்தகங்கள், காலணிகள், கைப்பைகளை கொடுக்கலாம் எனத் தெரிவித்திருக்கிறார் நடிகை நிக்கி கல்ராணி.

பெறுவதை விட கொடுப்பது தானே மகிழ்ச்சி… அத்தகையை மகிழ்ச்சியை நாமும் தேவையானர்களுக்கு கொடுத்து, மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குவோம்…

Advertisement:
SHARE

Related posts

நடிகர் சூர்யாவுக்கு எதிராக பாஜக தீர்மானம்

Ezhilarasan

ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டது தமிழக அரசு!

Saravana Kumar

தானியக் கிடங்கில் சிக்கிக்கொண்ட 5 சிறுவர்கள் உயிரிழப்பு!

Halley karthi